சினிமாவுக்கு மிகப்பெரிய சோதனையாக வந்தது "கொரோனா' லாக்டவுன். உலகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டு பல மாதங்களுக்கு அந்தத் துறையே ஸ்தம்பித்திருந்தது. இந்தியாவில் மிக மெதுவாக வளர்ந்துவந்த OTT பயன்பாடு, லாக்டவுன் காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டது. நெட் ஃப்ளிக்ஸ், அமேஸான், ஹாட் ஸ்டார் என பல மிகப்பெரிய நிறுவனங்கள் OTTயில் போட்டாபோட்டி போடுகின்றனர். "சூரரை போற்று' OTT ரிலீஸ் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த, அடுத்தடுத்து நேரடி OTT ரிலீஸ்க்கு படங்கள் வரிசையில் நிற்கின்றன.

Advertisment

tt

OTT தளத்திலேயே 'pay per view' என்ற புதிய வசதியுடன் வந்திருக்கிறது 'ONVI MOVIE' என்ற புதிய தளம். மாத சப்ஸ்க்ரிப்ஷன், வருட சப்ஸ்க்ரிப்ஷன் என்றில்லாமல் நாம் பார்க்க விரும்பும் படத்திற்கு மட்டும் பணம் செலுத்தி பார்த்துக்கொள்வதுதான் இந்த 'pay per view' முறை. இந்த onvi.movie தளத்தின் அறிமுக விழாவில் இரண்டு குறும்படங்கள் திரையிடப்பட்டன. ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கிய "ஸ்வீட் பிரியாணி' என்ற குறும்படமும் ராம்பிரசாத் இயக்கிய "புல்லட் பாபா' என்ற குறும்படமும் திரையிடப்பட்டன. இரண்டுமே இருபது நிமிடங்களுக்கு மேலான நீளம் உடையவை.

"ஸ்வீட் பிரியாணி' படத்தில் "பிராங்க்' புகழ் ஆர்.ஜே.வான சரித்திரன் நடித்திருக்கிறார். இயக்குனர் ஜெயச்சந்திர ஹாஷ்மி ஏற்கனவே தனது குறும்படமான "டுலெட்'டுக்காக உலகின் பல நாடுகளில் விருதுகள் பெற்றவர். உணவு டெலிவரிபாயின் ஒரு நாளை படமாக்கியுள்ள "ஸ்வீட் பிரியாணி', அழுத்தமாகவும் சுவாரசியமாகவும் சுவையாகவும் இருந்ததால் அனைவரது வரவேற்பையும் பெற்றது. ஜெயச்சந்திர ஹாஷ்மி, பெருநகரத்திலும் சாதி ஆதிக்க மனநிலை படிந் திருப்பதை அழுத்தமாகக் காட்சிப்படுத்தியுள்ளார். ஆதிக்க மனநிலை கொண்டவர்களை ஒரு பெயரும் நடையும்கூட எவ்வளவு தொந்தரவு செய் கிறது என்பது நம்மை யோசிக்க வைக்கிறது. அருள்தேவின் இசை ஒரு காட்சியில் மனதை அறுத்தது, ஒரு காட்சியில் மனதை வருடியது, மொத்தத்தில் பேசப்பட்டது. அத்தனை வெறுப்பையும் தாண்டி அன்பு தரும் மகிழ்ச்சி நிலைத்திருக்கும் என்று பேசும் "ஸ்வீட் பிரியாணி', உண்மையிலேயே ரொம்ப ஸ்வீட்தான்.

Advertisment

"புல்லட் பாபா', வட இந்தியாவில் நடந்த ஒரு உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட அமானுஷ்ய த்ரில்லர். சிறந்த தொழில் நுட்ப உருவாக்கத்துக்காகப் பாராட்டப்பட்டது இயக்குனர் ராம் பிரசாத்தின் "புல்லட் பாபா'. இந்த இரண்டு படங்களோடு இன்னும் பல படங்களும் ர்ய்ஸ்ண்.ம்ர்ஸ்ண்ங் தளத்தில் இருக்கின்றன. விழாவில் கலந்துகொண்ட நக்கீரன் ஆசிரியர், ""இது ஒரு புது முயற்சி. இதற்கு பெரிய வரவேற்பு இருக்கும், இருக்கவேண்டும். சினிமா கனவுகளோடு வருபவர்களுக்கு வாய்ப்பளிக்கும் நல்ல முயற்சி'' என்று பாராட்டினார். "சினிமா முயற்சியில் இருக்கும் புதியவர்களுக்கு தங்கள் தளம் திறந்திருக்கிறது என்றும் தங்களை எளிதில் அணுகலாம்' என்றும் அழைப்பு விடுத்திருக் கின்றனர் ஞசயஒ ஙஞயஒஊ நிர்வாகிகள். இது சினிமாவின் அடுத்த கட்டம்!

தங்கம் வாங்கிய அஜித்!

பைக் ரேஸ், கார் ரேஸ், ட்ரோன் (ரிமோட் டால் இயக்கப்படும் சிறிய ரக ஹெலிகாப்டர்), துப்பாக்கிச் சூடு, சைக்கிளிங் என அஜித்தின் பொழுதுபோக்குகள் பலவகை. லேட்டஸ்ட்டாக... 46-வது தமிழ்நாடு துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற அஜித்தின் புகைப்படங்கள் வழக்கம்போலவே வைரலாகின. "தல வழி தனி வழி'தான் என்கின்றார்கள் வலிமை அப்டேட் டுக்காகக் காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்.

மூச்சு வாங்கிய சிம்பு!

tt

Advertisment

"அஅஅ' பிரச்சினையில் அடிபட்டிருந்த சிம்புவின் இமேஜ், உடம்பை குறைத்து ஸ்லிம்மாகி "ஈஸ்வரன்' படத்தில் சுறுசுறுப்பாக நடித்து முடித்துக் கொடுத்ததில் மீண்டிருக்கிறது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வொர்க் அவுட் வீடியோ வெளியிடுவது சிம்புவின் வழக்கம். லேட்டஸ்ட் வீடியோவில் மூச்சுவாங்க... கடுமையாக உடற்பயிற்சி செய்யும் சிம்புவை "லவ்லி' என்று பயிற்சியாளர் பாராட்ட... "உனக்கு லவ்லி மேன், எனக்கு இல்லையே' என்று புலம்புகிறார் சிம்பு.

டைவர்ஸ் பண்ணிட்டேன்... ஆனாலும் சந்தோஷமா இருக்கேன்!

tt

தொலைக்காட்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி என்ற டி.டி. பெண்கள் தினத்திற்கு ""36 வயதாகியும் நான் தனியாக இருக்கிறேன், விவாகரத்து பெற்று இருக்கிறேன், குழந்தையில்லாமல் இருக்கிறேன், மூட்டு வலியுடன் இருக்கிறேன், ஆனாலும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வாழ்க்கை. உங்கள் மகிழ்ச்சியை நீங்கள் தேர்ந்தெடுங்கள்'' என்று வாழ்த்துச் சொல்லியிருக்கிறார்.

சந்தோஷமா இருக்கு... அதுனால டைவர்ஸ் பண்ணல!

பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், ரஜினியின் "பேட்ட' படத்தின் வில்லனாக நடித்தவர். இவரது மனைவி ஆலியா, கடந்த ஆண்டு இவர்மீது பல குற்றச் சாட்டுகளை வைத்து இவரை பிரிந்தார். விவாகரத்து பெற இருந்த நிலையில் திடீரென மனசு மாறியிருக்கிறார். காரணம் யார் தெரியுமா? "கொரோனா'. ஆலியா கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் குழந்தைகளையும் குடும்பத்தையும் மிகுந்த அக்கறையுடன் பார்த்துக்கொண்டாராம் நவாஸ். தனிமைப்படுத்தப்பட்ட தன்னுடன் தினமும் போனில் பேசி அன்பாக விசாரித்ததால் "இதெல்லாம் பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதனால் டைவர்ஸ் பண்ணல. முடிவை மாத்திக்கிட்டேன்' என்று அறிவித் திருக்கிறார் ஆலியா. கொரோனாவால் இணைந்த குடும்பம்!

-வீபீகே